எமது SEEDS நிறுவனத்தால் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்ற உள்ள மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் செயலமர்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றது.
இதன் ஒருகட்டமாக இன்று(06) காலை 08.00 மணிக்கு #மட்_கிண்ணையடி_சரஸ்வதி_வித்தியாலயத்தில் கிண்ணையடி #சரஸ்வதி_வித்தியாலயம்,#சுங்காங்கேனி_அரசினர்_கலவன்_தமிழ்_வித்தியாலயம்,முறவோடை #சக்தி_வித்தியாலயம் மற்றும் #முருக்கன்_தீவு_சிவசக்தி_வித்தியாலயம் அடங்கலாக புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களுக்கான செயலமர்வுகளை நடாத்தியிருந்தோம்
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதுடன் ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், #SEEDS நிறுவன உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது



Leave a Comment