கல்வியை மேம்படுத்துவதற்காக மற்றுமொரு உதவிக்கரம்
எமது SEEDS அமைப்பானது மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறுபட்ட கல்வி சார் உதவிகளை எமது மாணவர்களுக்காக மேற்கொண்டு வருகின்றது .
இதனடிப்படையில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் 03ம் வருடத்தில் கல்வி கற்கும் மிகவும் பின்தங்கிய கிராமமான கிரான் பிரதேசத்திற்குட்பட்ட பூலாக்காடு பிரம்படிதீவினை சேர்ந்த மாணவன் முத்துக்குமார் ரகுவரன் அவர்கள் எமது அமைப்பிடம் மடிக்கணனி ஒன்றினை கோரியதற்கமைவாக அவரின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் குறித்த மாணவருக்கு மடிக்கணனி ஒன்று வழங்கிவைக்கப்பட்டது .
குறித்த மாணவர் கல்வியில் சிறப்பாக செயற்பட்டு உயர் நிலையை அடைய எமது வாழ்த்துக்கள் !
கல்விக்காக எமது செயற்பாடு தொடரும் .
நன்றி




Leave a Comment