இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் 2023/24 ஆண்டுக்கான சட்டமாணி சிறப்பு பட்டப்படிப்பினை மேற்கொள்ள இருக்கும் மாணவர்களுக்கான தெரிவுப் போட்டி பரீட்சை நாளை(17) நடைபெற உள்ளது.
இப் பரீட்சையை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்களுக்காக எமது #SEEDS நிறுவனத்தினால் இலவசமாக கடந்த ஒன்றரை மாத காலமாக பரீட்சையை எதிர்கொள்வது பற்றி திறமையான வளவாளர்களினால் கருத்தரங்குகள் நடாத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது மாவட்டத்திற்கான திறமையான நேர்மையான சட்டத்தரணிகளை உருவாக்கும் நோக்கத்தில் எம்மால் நெறிப்படுத்தப்பட்டிருந்த இக்கருத்தரங்கில் கலந்து பயன் பெற்ற பயனாளிகளினால் எதிர்வரும் காலங்களில் எமது மாவட்ட மக்கள் அதிலும் பாமர மக்கள் பயன்பெற வேண்டும். ஆகவே இப்பரீட்சையில் தோற்றும் அனைவரும் நல்ல பெறுபேறுகளை பெற்று வர எமது நிறுவகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்
நன்றி
SEEDS

Leave a Comment