• +94773508565 | +94752430365

  • 55/3, Baily Cross Road, Batticaloa.

avatar

இவ்வருடம் க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களினுடைய பெறுபேற்றினை அதிகரிக்கும் நோக்கோடு எமது மாணவர் மேன்மை கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் அண்மையில்  இலவச செயலமர்வுகள் பிரதேச ரீதியில் நடாத்தப்பட்டிருந்தது. 

அதனடிப்படையில் கடந்த (26, 27, 28. April) திகதிகளில் வெல்லாவெளி, மண்டூர், சின்னவத்தை, பாலையடிவட்டை, போரதீவு, தும்பங்கேணி, திக்கோடை போன்ற பிரதேசப் பாடசாலை மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கானது  மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலயம் மற்றும் மட்/பட்/திக்கோடை கணேசா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் நடைபெற்றது. 

இம்முறை பரீட்சை எழுதிக்கொண்டிருக்கும் மாணவச் செல்வங்களின் பெறுபேறுகள் சிறப்பாக அமைய வாழ்த்துகின்றோம்…

 #seedshelp #batticaloa #educationhelp #riseknowledge #GCEOL24

Leave a Comment